வீட்டை என் பெயரில் எழுதி கொடுங்கள்: மறுத்த மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்

Youtube Video

சென்னையடுத்த வில்லிவாக்கத்தில் சொத்து பிரச்சைனைக்காக மாமனாரின் கழுத்தை காய்கறிவெட்டும் கத்தியால் வெட்டி கொன்றுள்ளார் மருமகன்.

 • Share this:
  வில்லிவாக்கம் சிட்கோ நகர் 46 வது தெருவை சேர்ந்தவர் 52 வயதான குமார், 48 வயதான பிரேமலதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரேமலதாவின் தந்தை 82 வயதான ஜெகநாதன், அவரது மனைவி ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

  பிரேமலதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் குமார் வேலைக்கு செய்லாமல் ஊர் சுற்றிவந்துள்ளார். மாமனார் ஜெகன்நாதனுக்கு சொந்தமான பூர்வீக வீடு வேலூர் மாவட்டம் ஆற்காடு வரகரபுதூர் என்ற இடத்தில் உள்ளதாக தெரிகின்றது. அந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றி தருமாறு கடந்த சில தினங்களாக குமார் மாமனாரிடம் கேட்டுள்ளார்.

  இதற்கு ஜெகன்நாதன் மறுப்பு தெரிவிக்கவே மாமனார் மருமகன் இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழன் அன்று மீண்டும் ஜெகன்நாதன் மறுப்பு தெரிவிக்கவே இரவு 10 மணி அளவில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

  ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த குமார். ஜெகநாதனை சமையல் அறையில் இருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார் . இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த ஜெகநாதன் சம்பவ இடத்திலையே துடிதுடித்து உயிரிழந்தார்.

  சம்பவம் இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார் சமையல் அறையில் கிடந்த முதியவர் சடலத்தை மீட்டனர். மேலும் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்காக மருமகனே மாமனாரை கொலை செய்த சம்பவம் வில்லிவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி : அவினாசி சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்

   

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: