ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இங்கு இருக்கும் கவர்னர்கள் ஆட்சியில் தலையிடுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் இவர்கள் தலையிடுகின்றனர். பாஜக ,ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு என்ன தகுதி இருக்கின்றது - ராகுல் காந்தி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சிப்பதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாரத் ஜோடோ எனப்படும் தேச ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் 21ஆம் நாள் பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளார். கேரளாவிலிருந்து காலையில் புறப்பட்டு, நாடுகாணி வழியாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோழிப்பாலம் பகுதிக்கு வந்த அவரை, ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்றனர்.

பிற்பகலில் அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தேயிலை விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடிய அவர், பின்னர் கோழிப்பாலம் பகுதியில் இருந்து மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்.அப்போது, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் தேசியக் கொடி மற்றும் காங்கிரஸ் கொடிகளை ஏந்தியவாறு வழிநெடுகிலும் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்..6 கிலோ மீட்டர் தூரம் நடைபயணத்தில் ஈடுபட்ட அவருக்கு, பல இடங்களில், செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பாங்கு ஓதும் ஓசை கேட்டதும் பேச்சை நிறுத்தினார். பாங்கு ஓதி முடித்ததும் மீண்டும் பேச்சைத் தொடர்ந்த அவர், தமிழ்நாட்டில் சில அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கப் பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 2 மடங்கு உயர்வு- அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்

இங்கு இருக்கும் கவர்னர்கள் ஆட்சியில் தலையிடுகின்றனர் என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் இவர்கள் தலையிடுகின்றனர். பாஜக ,ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு என்ன தகுதி இருக்கின்றது’ என கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘ஜி.எஸ்.டியில் மாநில அரசுகள் பங்குதாரர்கள்.உரிய நேரத்தில் ஜி.எஸ்.டி தொகை மாநிலங்களுக்கு தர வேண்டும். ஓரே மொழி, ஒரே நாடு என்று பா.ஜ.க சொல்கின்றது.நமக்கு தேவை ஒற்றுமை. இங்கே ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை சிலர் விரும்பவில்லை. ஒவ்வொரு மொழியும், பண்பாடும் மதிக்கப்பட வேண்டும், காப்பாற்றபட வேண்டும். சமீபகாலமாக நாட்டின் நிலையை கவனத்தால் , பா.ஜ.க செய்யும் அனைத்தும் தெரியும்.

மேலும் படிக்க: தமிழக அரசை கலைத்தால் என்ன? பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ட்விட்!

இந்தியா மிகப்பெரிய அளவில் வேலை இல்லாமையை சந்தித்து வருகின்றது. விலைவாசி உயர்ந்துள்ளது. விவசயிகள், தொழில் முனைவோர் பாதிக்கப்படுகின்றனர். ஓவ்வொரு தொழில் முனைவோரும் ஜிஎஸ்டி பேரழிவை எற்படுத்தி இருப்பதாக சொல்கின்றனர். ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவை ஏற்றுக்கொள்ள முடியாது.ஏழை மக்கள் அதிகமாக பணம் செலவழிக்க கூடிய இந்தியாவாக இருக்கிறது” என பேசினார்.

Published by:Murugesh M
First published:

Tags: Congress, Rahul gandhi