நாளை நடக்கவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து

மாதிரிப் படம்

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

  • Share this:
    காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதுமுள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். முன்னதாக தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி அக்டோபர் 2-ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது. கூட்டத்தை பொது வெளியிலோ அல்லது காற்றோட்டமான இடத்திலோ நடத்தலாம். கூட்டத்துக்கு முன்பாக முழுமையாக அது நடைபெறும் இடத்தை தூய்மை செய்து, கிருமி நாசினி பொருள்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில், சில மாவட்ட ஆட்சியர்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு தடைவிதித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளில் நாளை நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் நாளை நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்தார்.

    அதேபோல, திருப்பூரில் கிராம சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலும் நாளை நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.


    கோவையிலும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 860 ஊராட்சிகளிலும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்தார்.
    Published by:Karthick S
    First published: