பயோமெட்ரிக் பிரச்னையைத் தீர்த்து, பொங்கல் பரிசை விரைந்து வழங்குக - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

டிடிவி தினகரன்

பயோமெட்ரிக் பிரச்னை தீர்த்து, பொங்கல் பரிசை விரைந்து வழங்க தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  பயோமெட்ரிக் பிரச்னையைத் தீர்க்கக் கோரி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் விரல் ரேகை வைத்த பின்னரே பொருள் வாங்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், அதை செய்ய இயலாதபடி சர்வர் பிரச்னை ஏற்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சரே அறிவிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

  ஒரு புதிய நடைமுறையைச் செயல்படுத்துவதற்கு முன்னர் அதற்கான கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டாமா? அதைத் தொடங்கிய பின்னர் சர்வர் பிரச்னை எனக் கூறுவதில் அரசின் திறனற்ற தன்மையே வெளிப்படுகிறது.

  Also read: அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

  கடந்த 3 நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ள சர்வர் பிரச்னையை உடனடியாக சரி செய்து, அறிவித்தபடி பொங்கல் பரிசுகள் வழங்கும் பணியை விரைந்து செய்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: