முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சொல்லதிகாரம்: புத்தம் புதிய விவாத நிகழ்ச்சி.. இன்று முதல் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில்!

சொல்லதிகாரம்: புத்தம் புதிய விவாத நிகழ்ச்சி.. இன்று முதல் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில்!

சொல்லதிகாரம்

சொல்லதிகாரம்

மக்களின் மனங்களில் எழும் சமரசமற்ற கேள்விகளைக்கொண்டு பொறுப்புமிக்க உரையாடலை நிகழ்த்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு சொல்லதிகாரம் விவாத நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வழக்கமான விவாத நிகழ்ச்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் சொல்லதிகாரம் விவாத நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

அரசியல் அரட்டை கச்சேரியாக மட்டும் அல்லாமல், ஆக்கப்பூர்வமான மக்கள் பிரச்னைகள் முதல் அவசியமான அரசியல் நகர்வுகள் வரை அனைத்தையும் நேர்மறையாக அணுகுவதே சொல்லதிகாரம் விவாத நிகழ்ச்சியின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்களின் மனங்களில் எழும் சமரசமற்ற கேள்விகளைக்கொண்டு பொறுப்புமிக்க உரையாடலை நிகழ்த்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு சொல்லதிகாரம் விவாத நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு செய்தி ஊடக உலகில், தனது நேர்மையான மற்றும் நேர்த்தியான வாதங்களால் புகழ்பெற்ற ஊடகவியலாளரும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியருமான ச.கார்த்திகைச்செல்வனின் நெறியாள்கையில் சொல்லதிகாரம் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இன்று முதல், வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சொல்லதிகாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

First published:

Tags: News18, News18 Tamil Nadu