Solar Eclipse | அரிய நிகழ்வான ’பகுதி' சூரிய கிரகணம் - தமிழகத்தில் எப்போது பார்க்கலாம்?
Solar Eclipse Date | அழகிய வானியல் நிகழ்வாக கங்கண சூரிய கிரகணம் வருகிற 21-ம் தேதி நிகழ உள்ளது. தமிழகத்தில் ஒரு பகுதி கிரகணமாக தெரியும், இதனை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம்
- News18
- Last Updated: June 18, 2020, 10:04 PM IST
சூரிய கிரகணம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் கூறியதாவது, இந்த ஒரு அரிய வானவியல் நிகழ்வு இதற்கு முன்னாள் 2010 ஜனவரி மாதம் 15 -ம் நாளும், 2019 டிசம்பர் மாதம் 26-ம் நாள் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அரிய கங்கண சூரிய கிரகணத்தை பார்த்துள்ளோம்.
இப்பொழுது நாம் அதனை பகுதி சூரிய கிரகணமாக பார்க்க உள்ளோம், ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களிலான ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கங்கண சூரிய கிரகணமாக பார்ப்பார்கள்.
மீண்டும் இதே போன்று 2031 மே-மாதம் 21-ஆம் நாள் தான் கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியும், அப்போது மதுரை,தேனி போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வளைய கங்கண சூரிய கிரகணத்தை நம்மால் காண முடியும். இந்த ஆண்டு சூரிய கிரகணம் ஏற்படும் நாள் மற்றும் நேரம்
ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழும் சூரிய கிரகணம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும். காலை 10:17 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடைகிறது. மேலும் மதியம் 2.02 மணிக்கு கிரகணம் முடிவடையும். இதன் பின்னர், 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் 14ம் தேதி மற்றொரு சூரிய கிரகணம் நிகழும். இந்த முறை சூரிய கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காணலாம்.
சூரிய கிரகணம் இந்தியாவில் மட்டுமல்லாமல் மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவிலும் தெரியும்.இந்தப் பகுதி நேர கங்கண சூரிய கிரகணம் டெல்லியில் கிரகணம் 94 சதவீதமும், கவுஹாத்தியில் 80 சதவீதமும், பாட்னாவில் 78 சதவீதமும் இருக்கும். சில்சாரில் 75 சதவீதம், கொல்கத்தாவில் 66 சதவீதம், மும்பையில் 62 சதவீதம், 37 சதவீதம்பெங்களூரில், சென்னையில் 34 சதவீதம், போர்ட் பிளேயரில் 28 சதவீதமும் தெரியும்.
இந்திய நேரப்படி சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி.
படிக்கஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்
படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு
இந்த கிரகணம் உலகில் முதலாவதாக 9.15.58 மணிக்கு தொடங்குகிறது.
முழு கிரகணம் காலை 10.17.48 மணிக்கு தொடங்குகிறது.
உச்சக்கட்ட கிரகணம் நண்பகல் 12.10.04 மணிக்கு
சில பகுதியில் கிரகணம் முடியும் நேரம் மதியம் 14.02.17 மணிக்கு
கடைசியாக கிரகணம் முடியும் நேரம் 15.05.01 மணிக்கு
21-ம் தேதி நிகழும் இந்த கிரகணம் சென்னையில் 10.22 மணி முதல் 11.58 மணி வரை தெரியும். வெறும் கண்களாலோ, தொலைநோக்கி வழியாக இதனை பார்க்ககூடாது.
வீடுகளில் இருந்தே சூரிய கிரகணத்தை எப்படி பார்ப்பது
முழு ஊரடங்கு காரணமாக கிரகணத்தின் போது கிரகணத்தை பார்த்து ரசிக்க நம்முடைய கோளரங்கத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யவில்லை, பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே இந்த கிரகணத்தை பார்ப்பதற்கு சில ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு வெள்ளை அட்டையில் சிறிய அளவில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய துளையிட்டு கீழே தரையில் வைத்து வெண்ணிற ஆடையை வைத்து, துளையிட்ட அட்டையினை சற்று உயர்த்திப் பிடித்தால் சூரியனுடைய பிம்பம் கீழே உள்ள அட்டையில் விழுவதை பார்க்கலாம்.
கிரகணம் நேரிடும் பொழுது கிரகணத்தின் வடிவத்திற்கு ஏற்ப நாம் அந்த இமேஜில் இருந்து இந்த கிரகண மாறுவதை நம்மால் பார்க்க முடியும்.
கண்ணாடியில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட துளையிட்ட ஒரு அட்டையை ஒட்டி சூரியனுடைய பிம்பத்தை அதில் பிரதிபலிக்கச் செய்து ஒரு இருண்ட அறைக்குள் சுவற்றில் அந்த சூரியனுடைய பிம்பத்தை விழ செய்யலாம் .
வெல்டர்ஸ் கிளாஸ் மூலம் சூரியனை சில விநாடி நேரங்கள் பார்க்கலாம், அங்கீகரிக்கப்பட்ட சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடிகள் இருந்தால் அதனைக் கொண்டும் சூரியனே பார்க்கலாம் .
பைனாகுலர் அல்லது தொலை நோக்கியை பயன்படுத்தி ஒரு வெண் திரையில் பிம்பத்தை விழ வைத்து பார்க்க வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது, இந்த செயல்பாடுகளுக்கு குழந்தைகளுக்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருந்து குழந்தைகளை தொலைநோக்கி பைனாகுலர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இப்பொழுது நாம் அதனை பகுதி சூரிய கிரகணமாக பார்க்க உள்ளோம், ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களிலான ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கங்கண சூரிய கிரகணமாக பார்ப்பார்கள்.
மீண்டும் இதே போன்று 2031 மே-மாதம் 21-ஆம் நாள் தான் கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியும், அப்போது மதுரை,தேனி போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வளைய கங்கண சூரிய கிரகணத்தை நம்மால் காண முடியும்.