செங்கத்தில் சூரிய கிரகணத்தை அடுத்து ல் வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வதந்தியால் பல வீடுகளின் வாசலில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
சூரியனுக்கும் பூமிக்கு இடையில் நிலவு வரும்போது, நிலவு, சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.
நீள்வட்ட பாதையில் சூழல்வதால், பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான இடைவெளியும், சூரியனுக்கும், நிலவுக்கும் இடையிலான இடைவெளியும் தொடர்ந்து மாறுபட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நிலவு, சூரியனை சுமார் 4 மணி நேரம் மறைத்தது. இந்த சமயம் சூரியன் பிறைவடிவில் காட்சியளித்தது. தமிழகத்தின் பல இடங்களில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த சூரிய கிரகணத்தை பலர் அறிவியல் பூர்வமாக பார்த்தாலும், சிலர் கிரகணத்தின் போது சாப்பிட கூடாது, வெளியே போக கூடாது போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் தெரிந்த சூரிய கிரகணத்தால் இல்லதரசிகள் தங்களுடைய குடும்பத்திலுள்ள ஆண்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதனை தடுப்பதற்கு பரிகாரமாக குடும்பத்திலுள்ள ஆண்களின் எண்ணிக்கையின்படி வீதிகள் தோறும் உள்ள வீடுகளின் வாசற்படியில் வாழை இலை, பச்சை அரிசி, மஞ்சள், குங்குமம், மலர் போன்ற 12 வகையான பொருட்களை வைத்து அகல் விளக்கு ஏற்றி வழிபட்டார்கள். இந்த அகல்விளக்கு ஜோதி மீண்டும் கார்த்திகை தீபத்திருநாள் போல் கிராமப்புறங்களிலும் மற்றும் நகரத்தில் உள்ள வீதிகளில் அகல்விளக்கு ஜோதி பிரகாசமாக காட்சியளித்தது.
- க. ராஜா
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.