Home /News /tamil-nadu /

Solar Eclipse | சூரிய கிரகண நிகழ்வின் போது வித்தியாசமாக பிரதிபலித்த மரத்தின் நிழல்...! வீடியோ

Solar Eclipse | சூரிய கிரகண நிகழ்வின் போது வித்தியாசமாக பிரதிபலித்த மரத்தின் நிழல்...! வீடியோ

News18

News18

Solar Eclipse 2019 Video |

  • News18
  • Last Updated :
கடலூரில் அபூர்வ சூரிய கிரகண நிகழ்வின் போது மரத்தின் அடியில் நிலா போன்று நிழல்கள் பிரதிபலித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பூமியின் துணைக்கோளான நிலவு, பூமியை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்றது. அதேபோல், சூரியனை, பூமி நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. இந்த இயற்கையான நிகழ்வில், சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது.

சூரியனுக்கும் பூமிக்கு இடையில் நிலவு வரும்போது, நிலவு, சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 8 மணியளவில் நிலவு, சூரியனை மறைக்கத் தொடங்கியது. இந்த சமயம் சூரியன் பிறைவடிவில் காட்சியளித்தது. தமிழகத்தின் பல இடங்களில் சூரிய கிரகணம் நடந்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் சார்பாக வளைய சூரிய கிரகணத்தை காணும் நிகழ்வு கடலூர் வெள்ளி கடற்கரையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.



60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த அறிய நிகழ்வை காண கடலூர் வெள்ளி கடற்கரையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அனைவரும் காணும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் சார்பாக தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி, பிம்ப பிரதிபலிப்பு முறைகளில் கிரகணத்தை பார்வையிட்டு வருகின்றனர்

தொடர்நது கடலூர் பெரியார் கல்லூரி முன்பு உள்ள ஆலமரத்தின் மேல்பட்ட கிரகண ஒளியால் தரை முழுவதும்  நிலா வடிவத்தில் நிழல் பிரதிபலித்தது. இந்த காட்சி பிரமிப்பாக இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
Published by:Sankar
First published:

Tags: Solar eclipse

அடுத்த செய்தி