பாலியல் புகாரில் கைதான முகிலனுக்கு நிபந்தனை ஜாமின்

பாலியல் புகாரில் கைதான முகிலனுக்கு நிபந்தனை ஜாமின்
  • News18
  • Last Updated: November 13, 2019, 2:15 PM IST
  • Share this:
பாலியல் புகாரில் கைதான சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் முகிலன் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் புகாரில் கைதான சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு நிபந்தனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் முகிலன் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது

இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்னைகளுக்கான போராட்ட களங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் முகிலன். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் பேட்டியளித்தவர் திடீரென மாயமானார். முகிலன் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.


இதனிடையே பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரை முகிலன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதானார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல் துறையின் நற்பெயரை களங்கப்படுத்தி விட்டார். அதனால் ஜாமின் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் முகிலன் மீது பாலியல் புகார் அளித்த கரூர் குளித்தலையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரும் முகிலனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முகிலனுக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி கரூர் சிபிசிஐடி காவல்நிலையத்தில் 3 நாட்களுக்கு ஒருமுறை முகிலன் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
First published: November 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading