'முதலமைச்சரின் நிதியுதவி திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்' - சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்

கொரோனாவில் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளையும் எந்தவித வரையறைகளும் இன்றி காப்பாற்றி கரைதூக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார் என்றும் இதனை கொச்சைப்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 • Share this:
  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவல் இரண்டு பெற்றோர்களையும் இழந்த பிரிவில் 92 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பெற்றோரில் ஒருவரை இழந்த பிரிவில் 3 ஆயிரத்து 409 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெயரில் 5 லட்ச ரூபாய் வைப்புத் தொகை வைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

  கொரோனாவில் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளையும் எந்தவித வரையறைகளும் இன்றி காப்பாற்றி கரைதூக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார் என்றும் இதனை கொச்சைப்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: