• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Kishore K Swamy: திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி கைது

Kishore K Swamy: திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி கைது

கிஷோர் கே.சாமி கைது

கிஷோர் கே.சாமி கைது

கிஷோர் கே சாமியை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளைகிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

  • Share this:
சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் அரசியல் விமர்சகர் கிஷோர் கே.சாமி, இவர் திமுகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தும், அக்கட்சியின் தலைவர்களையும் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

திமுக ஐடி பிரிவு சார்பில் அளித்த புகாரினை அடுத்து கிஷோர் கே.சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல்,  505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கிஷோரை கைது செய்தனர்.  

Also Read:   காவல்நிலையத்தில் கட்டி வைத்து அடித்தனர்: காவலர்களின் மிருகத்தன தாக்குதலை விவரிக்கும் காய்கறி விற்பனையாளர்!

இதனையடுத்து கிஷோர் கே சாமியை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆண்டு பெண் பத்ரிகையாளர்களின் கண்ணியத்திற்கு களங்கும் விளைவிக்கும் வகையில் அவர்களை அவதூறாக விமர்சித்ததாக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: