ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு பணிகளில் சமூக நீதி கொள்கைகள் - வல்லுநர் குழு அமைத்த தமிழக அரசு

அரசு பணிகளில் சமூக நீதி கொள்கைகள் - வல்லுநர் குழு அமைத்த தமிழக அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

நிர்வாக சட்ட நிபுணர்களையும் மூத்த வழக்கறிஞர்களும் இதற்கான குழுவில் அமைத்து தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  நேற்று  முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை பின்பற்றப்படுவதற்கான சட்டவல்லுனர் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தலைமையில் என்.ஆர்.இளங்கோ, அருண் மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் சட்டவல்லுனர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களாக உச்சநீதிமன்ற தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருண் மொழி, வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  அரசு அலுவலர்கள் குழுவில் சட்டவிவகாரங்களை பொறுத்தவரையில் அதன் செயலாளர்களாக இருக்கக் கூடிய கார்த்திகேயன் மற்றும் சட்ட இயற்றுதல் செயலாளர் கோபி ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிற வல்லுநர்களை பொறுத்தவரையில் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் முனைவர் சிவபிரபாண்டியன், தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் வழக்கறிஞர் குழுவில் இருக்க கூடிய வி.என்.வி. நிறைமதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி கொள்கைகளை செயல்படுத்திட உரிய சட்டத்தினை இயற்றுவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வதற்கான நிர்வாக சட்ட நிபுணர்களையும் மூத்த வழக்கறிஞர்களும் இதற்கான குழுவில் அமைத்து தலைமைச் செயலாளர் இறையன்பு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Government jobs, Tamil Nadu Government Jobs, Tamilnadu government, Tamilnadu govt