• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'வாட்டர் ஆடிட்டிங்' தெரியுமா..?- தொழில்நுட்பத்தால் நீர் மேலாண்மையில் அசத்தும் தாட்சாயிணி

'வாட்டர் ஆடிட்டிங்' தெரியுமா..?- தொழில்நுட்பத்தால் நீர் மேலாண்மையில் அசத்தும் தாட்சாயிணி

தாட்சாயிணி

தாட்சாயிணி

’லாரித்தண்ணீர் பிடிப்பதற்குப் பதிலாக வீட்டில் தினமும் குளிக்கவும் துவைக்கவும் சமையலறைக்கும் நாம் பயன்படுத்தும் நீரை முறையாக சுத்திகரித்தாலே போதும்’.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதுமே மக்கள் தண்ணீருக்காக திண்டாடும் சூழலே நிலவி வருகிறது. மழைநீர் சேமிப்பு குறித்து பல விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பேருக்கு ஒரு மழைநீர் சேமிப்புத் தொட்டியை கணக்குக்காக கட்டிவிட்டு கோடையில் ஆயிரக்கணக்கில் லாரித்தண்ணீர் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

முறையாக மழைநீரை சேமித்தும் வீட்டிலிருந்து வெளியேறும் நீரை முறையாக மறு சுழற்சி செய்தாலே போதும் காலத்துக்கும் தண்ணீர் பஞ்சமே வராது என்கிறார் ‘ப்ரதிக்ஸ் என்விரோ சொலியூஷன்ஸ்’ நிறுவனர் தாட்சாயிணி.

தொழில்நுட்பத்தால் நீர் மேலாண்மையில் அசத்தி வரும் தாட்சாயிணி நம்மிடம் பேசுகையில், “மக்களிடம் முதலில் நீர் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு வேண்டும். 2011-ம் ஆண்டு முதன்முதலில் நீர் நிலைகளை மீட்கும் பணியில் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனமாகக் களம் இறங்கினேன். ஏரி, குளங்கள் ஆகியவற்றை மாநகராட்சியின் ஆதரவுடன் சுத்தப்படுத்தத் தொடங்கினோம்.

மடிப்பாக்கம் ஏரி தூய்மைப் பணி


முதலாவதாக மடிப்பாக்கம் ஏரியை சாக்கடைக் கழிவுகளிலிருந்து மீட்க, தொடர்ந்து அரசின் சில நீர்நிலைகள் மீட்புத் திட்டங்களில் இணைந்து பணியாற்றினோம். அதன் பின்னர் தனி ஒரு வீட்டுக்கும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினேன்.

இன்றைய சூழலில் நாம் பயன்படுத்தும் தண்ணீரில் 90-100% வரையில் வீணாகதான் போகிறது. ஆயிரம் அடிக்கு போர்வெல் போட்டாலும் ஆபத்துதான். அதிக ஆழத்தில் கிடைக்கும் போர்வெல் நீரில் குளோரைடும் உப்புத்தன்மையும் அதிகமிருப்பதால் நமக்கு அந்த நீர் கெடுதிதான்.

RO அமைப்பு


ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாரக்கணக்கில் காத்திருந்து லாரித்தண்ணீர் பிடிப்பதற்குப் பதிலாக வீட்டில் தினமும் குளிக்கவும் துவைக்கவும் சமையலறைக்கும் நாம் பயன்படுத்தும் நீரை முறையாக சுத்திகரித்தாலே போதும். தண்ணீருக்காகப் போராடத் தேவையே ஏற்படாது. ’க்ரே வாட்டர் ரீசைக்ளிங்’ முறையில் நாம் பயன்படுத்திய நீரிலிருந்தே 70% நீரை நாம் மீண்டும் பயன்படுத்த சேமிக்கலாம். ‘பயோ சீவேஜ் ட்ரீட்மெண்ட்’ முறையில் கழிவுநீரையும் சுத்தப்படுத்த முடியும். இதை உபயோகப்படுத்த விருப்பமில்லை என்றாலும் பூமிக்கு அடியில் சேமியுங்கள்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.


ஓஎம்ஆர் போன்ற பகுதிகளில் எல்லாம் தண்ணீரே இல்லை என்கின்றனர். இதுபோன்ற இடங்களில் ‘வாட்டர் ஆடிட்டிங்’ தொழில்நுட்பம் மூலம் நல்ல தண்ணீர், உப்பு தண்ணீர் ஓட்டத்தை அறிந்து இடத்துக்கு ஏற்றாற் போல் பின்பற்றப்பட வேண்டிய திட்டம் மற்றும் செலவுக் கணக்குகளைத் தெரிவிப்போம். ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அல்லது கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் நீர் மேலாண்மை முறையில் மழைநீர் சேமிப்புத் தொட்டி, கழிவு நீர் மறுசுழற்சி ஆகியவற்றை முறையான தொழில்நுட்ப உதவியால் செய்தால் பணத்தையும் மிச்சம் செய்யலாம். தண்ணீர்ப் பிரச்னையும் இருக்காது.

கழிவுநீர் மறுசுழற்சித் திட்டம்


எங்கள் வீட்டில் நீர் மேலாண்மைக்கான அத்தனை அம்சங்களையும் செய்துள்ளேன். தண்ணீரை முறையாகப் பயன்படுத்தினாலே போதும் பஞ்சமே ஏற்படாது. நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் மழைநீரை சேமிப்பதுடன் நீர் மறுசுழற்சியையும் பின்பற்றினாலே தண்ணீர் திண்டாட்டம் இல்லை” என உறுதியுடன் கூறுகிறார் தாட்சாயிணி.

மேலும் பார்க்க: மணிக்கு 25ஆயிரம் லிட்டர் மழைநீர் சேமிப்பு... வறட்சியிலும் வாழும் சென்னை அப்பார்ட்மெண்ட்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: