காலமானார் வசந்தகுமார் எம்.பி: அஞ்சலி செலுத்த வருபவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க தடுப்புகள் அமைப்பு..

இரண்டு மணி நேரம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படவுள்ள நிலையில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் இடைவேளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது

காலமானார் வசந்தகுமார் எம்.பி: அஞ்சலி செலுத்த வருபவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க தடுப்புகள் அமைப்பு..
வசந்தகுமார் எம்.பி
  • Share this:
வசந்தகுமார் உடல் தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தடைந்தது. இரண்டு மணி நேரம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படவுள்ள நிலையில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் இடைவேளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது

வசந்த &கோ ஊழியர்கள், மக்கள் அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருக்கின்றனர். வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள காங்ரஸ் கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வசந்தகுமார் எம்.பி-இன் உடல் தியாகராய நகரில் இருக்கும் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது..


அஞ்சலி செலுத்த வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கிருமிநாசினி தெளிக்கப்பட்டுதான் அஞ்சலி செலுத்த வருபவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கட்சியினர் அஞ்சலிக்குப் பின்னர், பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக சத்தியமூர்த்திபவன் வளாகம் முன்வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், வசந்தகுமாரின் சொந்த ஊரான நாங்குநேரியில் உள்ள அகதீஸ்வரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வசந்தகுமார் எம்.பி., குடும்பத்தினர் அளித்துள்ள தகவலின்படி, ”நமது அண்ணாச்சி அவர்களின் மறைவையொட்டி நாளை நமது அனைத்து கிளைகளும் விடுமுறை அளிக்கப்படுகிறது.  காலை 8 மணி முதல் 9 மணி வரை சென்னை டி நகர் நடேசன் தெருவில் உள்ள அண்ணாச்சி வீட்டில் அஞ்சலி செலுத்தலாம்.

29/08/2020 காலை 8 மணி முதல் 9 மணி வரை சென்னை டி நகர் நடேசன் தெருவில் உள்ள அண்ணாச்சி வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் அதன் பிறகு காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்தலாம்

அதன்பிறகு சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (30/08/20) காலை 10 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading