”10% இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் தவறு”

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுபோல், உயர்கல்வியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் இளையதலைமுறை அமைப்பினர்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 8:12 PM IST
”10% இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் தவறு”
10% இட ஒதுக்கீடு
Web Desk | news18
Updated: July 26, 2019, 8:12 PM IST
முன்னேறிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு, மக்கள் தொகை அடிப்படையில் தவறு என்று இளைய தலைமுறை என்ற சமூக விழிப்புணர்வு அமைப்பினர் கூறுகின்றனர்.

2017 மற்றும் 18-ம் ஆண்டு 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் சாதிவாரியான எண்ணிக்கையை இளைய தலைமுறை அமைப்பினர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர்.

அதில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள்      37 %, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 27% மாணவர்களும் தேர்வெழுதியுள்ளனர். ஆனால் முன்னேறிய சமூகத்தை சேர்ந்த 3% மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


அதேபோல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில்   60% மாணவர்கள் அரசு பள்ளியில் பயில்வதும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில் 75% பேர் அரசு பள்ளியில் பயில்வதும் தெரிவந்துள்ளது.

ஆனால், முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களில் வெறும்       26% மாணவர்களே அரசு பள்ளியில் பயில்வது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுள்ள விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

2017-ம் ஆண்டு நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களில் பொதுப் பிரிவில் 25% பேர் முன்னேறிய சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Loading...

அதேபோல், ஒட்டுமொத்த இடங்களில் 7% பேர் முன்னேறிய சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.

இந்த தரவுகளின் அடிப்படையில், முன்னேறிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் முடிவு மிகவும் தவறானது என்று இளையதலைமுறை அமைப்பினர் கூறுகின்றனர்.

அத்துடன், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுபோல், தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர்களுக்கு உயர்கல்வியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Also Watch:  10 நாட்களில் கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்... தொடரும் சதுரங்க வேட்டை..

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...