ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு பேருந்துகளில் படிகளில் தொங்கும் மாணவர்களுக்கு போலீசாரின் கண்டிப்பு அவசியம் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

அரசு பேருந்துகளில் படிகளில் தொங்கும் மாணவர்களுக்கு போலீசாரின் கண்டிப்பு அவசியம் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

அதேபோல, உத்தரமேரூரில் இருந்து, வெங்கச்சேரி வரை அதிகளவில் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 1 minute read
  • Last Updated :

உத்தரமேரூரில் இருந்து வெங்கச்சேரிக்கு செல்லும் அரசு பேருந்துகளில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்யும் சில ரோமியோ மாணவர்களை போலீசார் எச்சரிக்கை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருமழையால் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உத்தரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள வெங்கச்சேரி பாலம் உடைந்தது. இதனால், உத்தரமேரூரில் இருந்து வெங்கச்சேரி வழியாக காஞ்சிபுரத்திற்கு செல்ல போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதனால், உத்தரமேரூரில் இருந்து வெங்கச்சேரிக்கு கட் சர்வீஸ் பேருந்துகள் இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக, மாணவிகள் அதிகளவில் செல்லும் பேருந்துதில், சீன் போடுவதற்காகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் வகையில் பேருந்துதில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர்.

உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரும் பேருந்துதில் புட்போர்டு அடிக்கும் மாணவர்களை கண்டுகொள்வதில்லை.

Also read... ஸ்ரீரங்கம் கோவிலில் தமிழக ஆளுநர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், வெங்கச்சேரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவும், படிகளில் தொங்கி சீன் போடும் ரோமியோக்களை கண்டிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல, உத்தரமேரூரில் இருந்து, வெங்கச்சேரி வரை அதிகளவில் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published: