ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாட்டிலேயே முதன் முறையாக ராணிப்பேட்டையில் நிறுவப்பட்ட காந்தி சிலை - நினைவிடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நாட்டிலேயே முதன் முறையாக ராணிப்பேட்டையில் நிறுவப்பட்ட காந்தி சிலை - நினைவிடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காந்தி சிலை

காந்தி சிலை

நாட்டிலேயே முதன் முறையாக நிறுவப்பட்ட காந்தி சிலைக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  மகாத்மா காந்தியின் 151 -வது ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவா் மறைந்தபின் நாட்டிலேயே முதன்முறையாக அவரது நினைவாக நிறுவப்பட்ட காந்தி சிலைக்கு நினைவு மண்டபம் கட்டி விழா எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

  அஹிம்சை மற்றும் சத்தியாகிரக வழிகளைப் பின்பற்றி நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்து புகழ் பெற்ற மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை மத்திய,மாநில  அரசு விமரிசையாகக் கொண்டாடிவருகிறது.

  இந்த சூழலில் சுதந்திர இந்தியாவை கட்டமைக்க பெரும் பாடுபட்ட மகாத்மா காந்தி உள்ளிட்ட சுதந்திர தியாகிகளின் தியாகங்களைப் போல், இந்திய நாட்டின சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திடுவதில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முன்னணியில் உள்ளது. கி.பி.1806-இல் வேலூா் கோட்டையிலிருந்து வெடித்துக் கிளம்பிய சிப்பாய் கலகமானது, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக கி.பி.1857-இல் நடைபெற்ற முதல் சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது.

  Also read... கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் கல்வித்தொகையாக ₹ 303.70 கோடி வழங்கப்பட்டுவிட்டது - பள்ளிக்கல்வித்துறை

  அந்த வகையில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு தன்னுயிரையும் நீத்த மகாத்மா காந்திக்கு, அவா் இறந்த 13-வது நாளிலேயே ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பில் ஜெயராம் செட்டியாா் என்பவரால் சிலை நிறுவப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

  அந்த வகையில் இறப்புக்குப்பின் மகாத்மா காந்திக்கு முதன்முறையாக சிலை நிறுவப்பட்ட இடம் என்ற பெருமை ராணிப்பேட்டைக்கு உண்டு. இந்த சிலை முத்துக்கடையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக இருப்பதாகக் கூறி கடந்த 2008-ம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டு நகராட்சி அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து சமூக ஆா்வலா்கள் இந்த சிலையை மீட்டு, மீண்டும் புதுப்பித்து ராணிப்பேட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்தனர்.

  இந்த சிலை நிறுவப்பட்டு 71 ஆண்டுகளாகி விட்ட நிலையில் தற்போது பள்ளி வளாகத்தில் வெட்ட வெளியில் இருக்கும் சிலையை கருத்தில் கொண்டு, நினைவு மண்டபம் கட்டி அங்கு சிலையை வைத்து விழா எடுக்க வேண்டும். இந்த வரலாற்று நிகழ்வு பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே நம் தேசத் தந்தைக்கு நாம் செய்யும் மரியாதை என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Vellore