காணாமல் போன முகிலன் திருப்பதியில் கைது! வீடியோ வெளியானது

Web Desk | news18
Updated: July 7, 2019, 12:17 AM IST
காணாமல் போன முகிலன் திருப்பதியில் கைது! வீடியோ வெளியானது
கைது செய்யப்பட்ட முகிலன்
Web Desk | news18
Updated: July 7, 2019, 12:17 AM IST
காணாமல் போனதாக கூறப்படும் சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது பள்ளித்தோழர் சண்முகம் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

திருப்பதியில் முகிலனை ஆந்திர போலீசார் கைது செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் முகிலன் தாடி, மீசையுடன் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார். அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பிப்ரவரி 15-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவணங்களை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார் சமூக செயற்பாட்டாளர் முகிலன்.

அன்று மாலையே ஊருக்கு புறப்படுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர் ஊர் சென்றடையவில்லை எனவும் காணாமல் போனதாகவும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் லயோலா மணி என்பவர் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எழும்பூர் ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறி பல்வேறு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதனையடுத்து முகிலன் காணாமல் போன வழக்கை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடுவதாக தமிழக காவல் துறை இயக்குனராக இருந்த டிகே.ராஜேந்திரன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார் முகிலன் ரயில் நிலையத்திற்கு வெளியே செல்வதும் ரயிலில் பயணிக்காததும் தெரியவந்தது. முகிலன் கடைசியாக எழும்பூர் ரயில்வே நிலையத்தில் சுமார் பத்தரை மணிக்கு வெளியே செல்லும் காட்சி மட்டும் தான் பதிவாகியிருந்தது.

சமூக செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது. அவர் பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் முகிலன் திருப்பதியில் உள்ளதால் ஆந்திர போலீசாரின் உதவியை சிபிசிஐடி போலீசார் நாடி உள்ளனர்.

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...