ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்- நெல்லை காவல் ஆணையரிடம் புகார்

அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்- நெல்லை காவல் ஆணையரிடம் புகார்

அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலையின் ட்விட்டர் பதிவுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவு வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க என்று நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முருகன். இவர் இன்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், ட்விட்டரில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் பக்கத்தை பின்தொடர்கிறேன். நேற்று அண்ணாமலை மோடியை வாழ்த்தி வெளியிட்ட பதிவில் இந்தியாவின் வளர்ச்சியை குறிப்பிடும்விதமாக from a pariah to viswa guru என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். pariah (பறையா)என்றால் உலக அளவில் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அல்லது கீழானவர்கள் என பலபொருள் தரும்படி சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள், இழிவானவர்கள் என்று குறிக்கும் அண்ணாமலை இதுபோன்று குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்தும் விதமாக பதிவு வெளியிடுகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனுதில் கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன், ‘பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து இதுபோன்று இழிவாக பேசி வருகிறார்.  பறையா என்ற வார்த்தை சட்டப்படி பயன்படுத்த கூடாது. எனவே அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆணையரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.

பாஜக தலைவர் அண்ணமலை சமீபத்தில் ஊடகத்தினரை தரக்குறைவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சர் பதவி: உதயநிதி பேச்சை கேட்காத திமுக நிர்வாகிகள்..மீண்டும் தீர்மானம்

அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ட்விட்டரில் பிரதமரை வாழ்த்தி அவர் போட்ட பதிவு மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இப்பதிவு குறிப்பட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Annamalai