மூலப்பொருட்களின் விலை உயர்வால் சோப்களின் விலை 20 சதவீதம் உயர வாய்ப்பு

மூலப்பொருட்களின் விலை உயர்வால் சோப்களின் விலை 20 சதவீதம் உயர வாய்ப்பு

கோப்புப் படம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் எனக் கூறப்படுகிறது.

 • Share this:
  சோப் உற்பத்தியின் மூலப்பொருட்களின் கடும் விலை ஏற்றத்தால் அனைத்து வகை சோப் தயாரிப்புகளுக்கும் 20 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தமிழ் நாடு சிறு தொழில் சோப் மற்றும் டிடர்ஜெண்ட் உற்பத்தியாளார்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  இந்தியாவில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் எனக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியா ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு வாங்கும் போது கூட ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

  ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் சாமானிய மக்கள் தினசரி வாழ்க்கை முறை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதன் தாக்கம் லாரிகளின் வாடகையும்  உயர்ந்துள்ளது. அதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

  மேலு படிக்க.... நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிமுகம் - கொளத்தூரில் சீமான் போட்டி?

  இந்நிலையில் தமிழ்நாடு சிறு தொழில் தமிழ் நாடு சிறு தொழில் சோப் மற்றும் டிடர்ஜெண்ட் உற்பத்தியாளார்கள் சங்கம் சோப்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்றும் அதனை தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் கண்டிப்பாக 20 சதவீதம் வரை சோப்க்களின் விலை உயரும் என்று அறிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: