உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மாணவர்களில் தமிழக அரசு சிறப்பு குழு முயற்சியால் தனி விமானம் மூலம் 181 மாணவர்கள்
சென்னை வந்தனர். சென்னை வந்த மாணவர்களுக்கு தமிழக அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மாணவர்களை கண்டதும் பெற்றோர் கட்டி பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.சில மாணவர்கள் தங்களை பாதுகாப்பாக அழைத்து வந்ததாக கூறி அமைச்சருக்கு பூங்கொத்து தந்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் பணி தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து சிறப்பு குழுவை அமைத்தார்.இதுவரை 771 தமிழக மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு தமிழகம் வந்துள்ளனர்.
Also read... உக்ரைனில் நிற பிரச்சினை உள்ளது... ரஷ்யா வழியாக மாணவர்களை அழைத்து வருவது பாதுகாப்பானது - ஜக்கிவாசு தேவ்
மாணவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்து வீடு செல்லும் வரை எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பு குழு உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது. வெளிநாட்டு சென்று படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் படிக்க வேண்டும் என்ற அக்கறை முதலமைச்சருக்கு உள்ளது.மாணவர்களை உடனே அழைத்து வர ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டது.
உக்ரைனில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்ளதாக தகவல். ஆனால் 2,221 தமிழக மாணவர்கள் இதுவரை பதிவு செய்து உள்ளனர். கடைசி மாணவர் வரை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தெரிவித்து மீட்பு பணியில் குழு ஈடுப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.