• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இதுவரை 29% பேர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்..

தமிழகத்தில் இதுவரை 29% பேர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்..

தடுப்பூசி

தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 29% மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியும் 7% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

  • Share this:
ஜனவரி 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை 2 கோடியே 30 லட்சத்து 71ஆயிரத்து 282 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 2 கோடியே 15 லட்சத்து 6 ஆயிரத்து 329 பேர் அரசு மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு கோடியே 97 லட்சத்து 18 ஆயிரத்து 380 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 33 லட்சத்து 52 ஆயிரத்து 902 பேர் கோவாக்சின் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வயது வாரி நிலவரம்:

18 முதல் 44வயதுக்குட்பட்டவர்கள்    - 85,94,296

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் -  1,29,12,033

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 6 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 919 ஆகும். இவர்களில் 1 கோடியே 74 லட்சத்து 21 ஆயிரத்து 987 பேர் அதாவது 29% மக்கள் முதல் டோஸ் செலுத்தி கொண்டனர்.

அதே போல் 40 லட்சத்து 84 ஆயிரத்து 342 பேர் அதாவது 7% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

Also read: பிரான்சில் இருந்து திரும்பிய இருவர் உட்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா!

இதில் 18-44 வயது பிரிவில் தமிழகத்தில் 3,86,95,314 பேர் உள்ளனர். இவர்களில் 81,03,073 அதாவது 20.94% முதல் டோஸ் செலுத்திக்  கொண்டுள்ளனர். இந்த வயது பிரிவில் 4,91,223 பேர் அதாவது 1.27% இரண்டாவது டோஸ்  போட்டு முடித்துள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் 2,19,20,605 பேர் உள்ளனர். இவர்களில் 80,03,503 பேர் அதாவது 37% முதல் டோஸ் போட்டுள்ளனர். இவர்களில் 29,02,631 பேர் அதாவது 13% பேர் இரண்டாவது டோஸ் போட்டு முடித்துள்ளனர்.

சிறப்பு பிரிவினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரம்

கர்பிணிகள் -   1,61,213
பாலூட்டும் தாய்மார்கள் -  1,28,736
மாற்றுத்திறனாளிகள் - 1,06,893
வீடற்றவர்கள் - 1,322
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் - 410

ஆக்ஸ்ட் 1ம் தேதி தடுப்பூசி கையிருப்பு நிலவரம்:

அரசு மையங்கள்

கோவிஷீல்டு -  10,86,810
கோவாக்சின் -        95,163
மொத்தம் -            11,81,973

தனியார் மையங்கள்
மொத்தம் - 3,04,727

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களை மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நீங்கி வருகிறது, மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு தடுப்பூசி வழங்க தொடங்கியுள்ளதால் பற்றாக்குறை நீங்கி வருகிறது என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: