ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தம்? - மாறி மாறி போட்ட சண்டை - சினேகன், ஜெயலட்சுமி இருவர் மீதும் வழக்குப்பதிவு!

சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தம்? - மாறி மாறி போட்ட சண்டை - சினேகன், ஜெயலட்சுமி இருவர் மீதும் வழக்குப்பதிவு!

சினேகன் - ஜெயலட்சுமி

சினேகன் - ஜெயலட்சுமி

சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தம்? மாறி மாறி கொடுத்த புகாரில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ஜெயலட்சுமி, பாடலாசிரியர் சினேகன் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, சினிமா பாடலாசிரியர் சினேகன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி விளம்பரம் தேடி வரும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ALSO READ | கோவை கார் வெடிப்பு: 6வது நபர் கைதில் பரபரப்பு திருப்பம்!

ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை  ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாடலாசிரியர் சினேகன் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பாடலாசிரியர் சினேகனும் தன் அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூல் செய்யும் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 19ஆம் தேதி திருமங்கலம் போலீசார் பாடலாசிரியர் சினேகன் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி மற்றும் ஆவணங்கள் மோசடி ஆகிய இரண்டு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சினிமா துறையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்த திருமங்கலம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, FIR Filed