ஆதரவற்றவர்கள், சாலையோரம் தஞ்சமடைந்தவர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், FoodBank India என்ற அமைப்பை நிர்வகித்து வருபவர் சினேகா மோகன்தாஸ். இவரது சேவையைப் பாராட்டி கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று இந்திய பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவருடன் 7 சாதனைப் பெண்களுக்கும் மோடியின் ட்விட்டரை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த நாளில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சினேகா மோகன்தாஸ் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் சென்னை மண்டலத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் சினேகா மோகன்தாஸ் “என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும்,மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களுக்கு நன்றி 🙏🏻 @maiamofficial#Maiamhttps://t.co/0mqIHKsy4x
2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் மக்கள் நீதி மையமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நேற்று கோவை, ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் 100 தொகுதி பொறுப்பாளர்கள் உடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
அதேபோல இன்று வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 112 தொகுதி பொறுப்பாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.
கமல்ஹாசன் நேற்று நிர்வாகிகள் இடையே பேசுகையில் கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.