ஓசூர் அருகே அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு - பக்தர்கள் பரவசம்!

ஓசூர் அருகே அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு - பக்தர்கள் பரவசம்!

ஓசூர் அருகே அம்மன் சிலை மீது நாகப்பாம்பு படமெடுத்து ஆடிய சம்பவத்தை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

 • Share this:
  ஓசூர் அருகே உள்ள இடை நல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நாகப்பாம்பு அம்மன் சிலை மீது அமர்ந்து பொதுமக்களுக்கு காட்சி அளிப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள இடை நல்லூரை சேர்ந்தவர் ரவி (விவசாயி). இவருடைய விளைநிலத்தில் அவர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கட்டியுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  இதற்காக, நாற்பது நாட்களாக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை ரவி பூஜை செய்ய கோவிலுக்குச் சென்றபோது விக்ரகத்தில் இருந்து திடீரென என சத்தம் வந்துள்ளது.

  திரும்பி பார்த்தபோது நாகப்பாம்பு படம் எடுத்த படி அம்மன் சிலை மீது உட்கார்ந்திருந்தது. இதை கண்டதும் ரவி அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து கிராம மக்களுக்கு தெரிவித்தார்.

  Also read: திருச்சியில் பெரியாருக்கு சிலை வைக்கக் கூடாது: ஆட்சியர் அலுவலகத்தில் அர்ஜூன் சம்பத் மனு

  பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, குருபட்டி, மத்திகிரி, டைட்டான், டவுன்ஷிப், இடை நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனுக்கு பூஜை செய்தும் பாம்பை தரிசித்து வணங்கி செல்கின்றனர்.

  செய்தியாளர் -  செல்வா

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: