Coimbatore: மலக்குடலில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.2.85 கோடி மதிப்பிலான தங்கம் கோவையில் பறிமுதல்

Coimbatore: மலக்குடலில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.2.85 கோடி மதிப்பிலான தங்கம் கோவையில் பறிமுதல்

கடத்தப்பட்ட தங்கம்

கேப்சூல் வடிவிலான இவ்வகை கடத்தலை, விமான நிலையத்தில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளால் கண்டறிய முடியாது.

  • Share this:
    மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட ரூ.2.85 கோடி மதிப்புடைய ‘பேஸ்ட்’வடிவிலான 5.74 கிலோ தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் பிப்ரவரி 1 ஆம் தேதி கோவை விமானநிலையத்திற்கு வந்த திருச்சி, சிவகங்கை, சென்னை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில், அவர்கள் 5 பேரும் மலக்குடலில் ‘பேஸ்ட்’வடிவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதில் ஒருவர் பதற்றமாக இருந்ததை அறிந்த அதிகாரிகள், அவரிடம் மேற்கொண்ட சோதனையில் 324 கிராம் எடைகொண்ட தங்கத்தை 28 ‘கேப்சூல்கள்’களாக விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.

    மலக்குடலிலும், விழுங்கப்பட்ட ‘கேப்சூல்கள்’ மூலமும் கடத்தி வரப்பட்ட தங்கத்தை பிரித்தெடுத்து சேதனை நடத்தியதில், மொத்தம் 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5.74 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபரைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

    மேலும் படிக்க...  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் - மத்திய அமைச்சர் அமித் ஷா

    கேப்சூல் வடிவிலான இவ்வகை கடத்தலை, விமான நிலையத்தில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளால் கண்டறிய முடியாது. தீவிர சோதனைகள் மற்றும் விசாரணை மூலமாக மட்டுமே கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: