பெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது! மத்திய அமைச்சர் ஆவேசம்

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது! மத்திய அமைச்சர் ஆவேசம்
ஸ்மிருதி இராணி
  • News18
  • Last Updated: December 6, 2019, 9:47 PM IST
  • Share this:
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு சாதி வர்ணம் பூசக் கூடாது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணின் காதலர் அவளை மணம் முடிப்பதாக கூறி உடல்ரீதியாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்ததுடன் அந்த பெண்ணை தனது நண்பனின் பாலியல் விருப்பத்திற்கும் உடன்பட கட்டாயப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பெண் புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் ஆஜராவதற்கு அவர் சென்றபோது அவரை வழிமறித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுபினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதுகுறித்துப் பேசிய ஸ்மிருதி இராணி, ’பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு சாதி வர்ணம் பூசக்கூடாது என்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் அரசி்யல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.


அயோத்தி கோவில் குறித்தும் உன்னாவ் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்தும் காங்கிரஸ் கட்சித் விமர்சித்ததற்கு ஸ்மிருதி இரானி இவ்வாறு பதில் அளித்தார்.

வேறு (உன்னாவ்) விவகாரத்தை பேசும்போது அயோத்தி (கோவில்) பற்றி பேசுவதா? மேற்கு வங்கத்தில் மால்டாவில் என்ன நடந்தது (பாலியல் வல்லுறவு) என்பதை மட்டும் இங்கு காங்கிரஸ் பேசவில்லை. அங்கு பாலியல் வல்லுறவு சம்பவங்கள், அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு பேச வந்துவிட்டீர்கள்’ என்று காட்டமாக தெரிவித்தார்.

Also see:
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading