ரூ.500 கோடி மதிப்பில் செங்கல்பட்டில் நவீன தரவு மையம்: அடிக்கல் நாட்டிய முதல்வர்

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் இதற்கு அடிக்கல் நாட்டினார்.

 • Share this:
  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறுசேரி சிப்காட்டில் ரூ.500 கோடி மதிப்பில் அமையவுள்ள நவீன தரவு மையத்தை (Smart Data Centre) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

  மத்திய அரசின் NATIONAL PAYMENTS CORPORATION OF INDIA நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில், நவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது. டிஜிட்டல் இந்தியா நோக்கத்தைச் செயல்படுத்தும் விதமாக பல்வேறு டிஜிட்டல்மயமாக்கப்பட்ட தரவுகள் இங்கு சேகரிக்கப்படவுள்ளன.

  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see:
  Published by:Rizwan
  First published: