தமிழர்களுக்கு சிறு கீறல் ஏற்படுத்தினாலும் அதற்கு எதிர்வினையை ஆற்றுவோம் - வேல்முருகன்

வேல்முருகன்

தமிழர்களுக்கு ஒரு சிறு கீறல் ஏற்படுத்தினாலும்   அதற்கு எதிர்வினையை  ஆற்றுவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கர்நாடக காவிரி அணை  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேகதாது அணையை கட்டியே தீருவேன் என கர்நாடக அரசு தொடர்ந்து  தெரிவித்து வருகிறது. இதனால்  தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும்  கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளது.  தொடர்ந்து இரண்டு மாநில அரசுகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. அதே வேளையில் அனைத்து கட்சி கூட்டம்  உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் சட்டரீதியாக நடைபெற்று வந்தாலும்,  கர்நாடகாவில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக வாட்டால் நாகராஜ்  உள்ளிட்ட  கன்னட அமைப்பினர்  கர்நாடகாவில் வாழும் தமிழர்களை அச்சுறுத்தி வருவதாகவும் தாக்குதலுக்கு உட்படுத்தி வருவதாகவும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு பின்வாங்க வேண்டும் என்றும் துன்புறுத்தி வருவதாகவும் தொடர்ந்து தகவல் வெளியாகி உள்ளது .

டெல்லியில் நடைபெறும் அனைத்து கட்சி குழு சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் ஜனநாயக ரீதியாக செயல்பட விரும்புகிறோம். ஆனால் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையினால், கர்நாடகாவில் உள்ள வாட்டாள் நாகராஜன் மற்றும் வேதி அமைப்பினர் தமிழர்களுக்கு ஒரு சிறு கீறல் ஏற்படுத்தினாலும்   அதற்கு எதிர்வினையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆற்றுவோம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: