SMALL PLANE WAS FOUND IN THIRUVALLUR DISTRICT FISHERMAN POLICE INVESTIGATION VAI
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா குட்டி விமானம்..
ஆளில்லாத குட்டி விமானம்
பழவேற்காடு அருகே மீனவ கிராமத்தில் மீண்டும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். திருப்பாலைவனம் காவல்துறையினர் அந்தக் குட்டி விமானத்தை கைப்பற்றி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழவேற்காட்டை அடுத்த சாட்டாங்குப்பம் என்ற பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதின்பேரில், காவல் துறையினர் ஆளில்லா குட்டி விமானத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வருவாய் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதேபோல கடந்த 5-ஆம் தேதி ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியது. அது உடைந்த நிலையில் இருந்ததைக் கண்ட அந்த பகுதி மீனவர்கள் இது குறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். ஒரே வாரத்தில் இரண்டு பயிற்சி சிறிய ரக விமானங்கள் கடலில் மீனவர்கள் கண்டெடுத்து ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா குட்டி விமானம்..
இந்த ஆளில்லா குட்டி விமானம், நிவர் மற்றும் புரெவி புயலில் அடித்து வரப்பட்டு, மீன் பிடித்துக் கொண்டிருந்த பழவேற்காடு பகுதி மீனவர்களிடம் இந்த வினாங்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.