நோய் பரவல் ஏற்படலாம் என்ற மருத்துவர்களின் அச்சத்தால் ஊரடங்கு முடிந்தும் சிறிய கிளினிக்குகள் திறக்கப்படாமலே உள்ளது.
ஊரடங்கு காலம் முடிந்தும் கூட, குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வந்த பல சிறிய கிளினிக்குகள் திறக்கப்படவில்லை. கிளினிக்குள் நோய் பரவலுக்கு காரணமாகிவிடலாம் என்ற அச்சத்தால் மருத்துவர்கள் கிளினிக்குகளை திறக்கவில்லை. சில மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை நேரத்தை 70% குறைத்து விட்டனர்.
சிறிய கிளினிக்குகளில் சமூக இடைவெளியுடன் நோயாளிகளை அமர வைக்க இயலாது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பாதிப்புகள் அதிகம் ஆகும் இந்நேரத்தில் முடிந்தவரை நோயாளிகளை நேரில் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என்றும் டெலி மெடிசன்- அதாவது ஆன்லைன் மூலமாக நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருவதாகவும் எலும்பியல் மருத்துவர் சுந்தர் குமார் தெரிவிக்கிறார்.
நேரில் பார்த்தே ஆக வேண்டும் என்ற அவசியம் உள்ள நோயாளிகளை மட்டும் திநகரில் உள்ள அவரது கிளினிக்கில் பார்ப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கி வந்த தோல் மருத்துவ கிளினிக் தற்போது இரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகிறது. வாரத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்த நிலையில் அந்த கிளினிக்கில் தற்போது ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 40 பேர் மட்டுமே ஆலோசனை பெற முடிகிறது. எனவே டோக்கன் கிடைக்கவே சிரமமாக இருப்பதாக நசிமுனிசா தெரிவிக்கிறார்.
Also read... யு.பி.எஸ்.சி தேர்வுகள் தாமதம் ஆவதால் என்ன விளைவுகள் உருவாகும்? கல்வியாளர்கள் விளக்கம்..
இளம் மருத்துவர்கள் சிலர் உரிய பாதுகாப்புடன் கிளினிக்குகளை நடத்தி வருகின்றனர். கொரோனா நோய் பரவுதலுக்கு அதிகம் வாய்ப்புள்ள பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் வயதான மூத்த மருத்துவர்கள் கிளினிக்குகளை திறக்கவில்லை என்றும்,கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதால், உரிய பாதுகாப்புடன் கிளினிக்குகளை நடத்துவதாக மருத்துவர் அஷ்வின் தெரிவிக்கிறார்.
சளி, காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு நேரம் இருக்கக்கூடாது என்பதால் கொடுக்கப்பட்ட உரிய நேரத்தில் மட்டும் நோயாளிகள் வருவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு நோயாளி வந்து சென்ற பிறகும் இருக்கைகள் சுத்தம் செய்வதாக அவர் கூறுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus