காவல்நிலையத்தில் 'வழுக்கி விழும்' விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை காவல்நிலைய பாத்ரூமில் குற்றவாளிகள் வழுக்கி விழுவது தொடர்பாக பதிலளிக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவல்நிலையத்தில் 'வழுக்கி விழும்' விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மனித உரிமைகள் ஆணையம்
  • Share this:
சென்னை காவல்நிலைய பாத்ரூம்களில் வழுக்கி விழும் சம்பவங்கள் எத்தனை? குற்றவாளிகள் மற்றும் காவல்துறையினர் எத்தனை பேர் வழுக்கி விழுந்தனர் என்று மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் குளியலறைகளை முழுமையாக பராமரிக்காத அதிதகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் சிலர் வழுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுவது தொடர்கதையாவதை அடுத்து இந்த கேள்வியை மாநில மனித உரிமைகள் ஆணையம் கேட்டுள்ளது.

அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு எதிராக புகார் அளித்த தேவேந்திரன் என்பவரை, அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனால் மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன், வழக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Also see...

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading