ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழை தொடங்கியது.. 6 மாவட்ட மக்களுக்கு அலெர்ட்!!

மழை தொடங்கியது.. 6 மாவட்ட மக்களுக்கு அலெர்ட்!!

சென்னை மழை

சென்னை மழை

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மழைதமிழ்நாட்டில் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் வர வாய்ப்பு இல்லை.. இன்று முதல் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை! (news18.com)

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai Rain, Rain Update, Weather News in Tamil