சென்னையில் இன்று அதிகாலை முதல் லேசான மழை

சென்னையில் இன்று அதிகாலை முதல் லேசான மழை

மழை

  • Share this:
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னையில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக லேசான மழை பெய்து வருகிறது, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Published by:Vaijayanthi S
First published: