• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Kanyakumari | குமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் தூக்கத் திருவிழா.... அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளை ஏந்தி வந்த பக்தர்கள்

Kanyakumari | குமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் தூக்கத் திருவிழா.... அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளை ஏந்தி வந்த பக்தர்கள்

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ராகாளி அம்மன் கோவில் மீனபரணி தூக்கத்திருவிழா 1092 குழந்தைகளின் தூக்க நேர்ச்சை துவங்கி நடந்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தூக்க தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வரலாற்று சிறப்பு மிக்கதுமான கொல்லங்கோடு பத்ராகாளி அம்மன் கோவில் மீனபரணி தூக்கத்திருவிழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை இன்று காலை 6 மணி முதல் துவங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு தூக்க நேர்ச்சைக்காக 1092 குழந்தைகளின் பெயர் பதிவு செய்து இருந்தனர்.

    திருமணம் ஆகி குழந்தை கிடைக்காதவர்கள் குழந்தை வரம் கிடைக்க வேண்டியும், திருமணம் தடைபட்டவர்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டியும் கோவிலில் நேர்ந்து வேண்டுதல் நிறைவேறிய உடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சையை நிறைவேற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 2000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்று வந்தது.

    மேலும் படிக்க... Coronavirus | தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பாதிப்பு : 2 ஆசிரியை, ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி

    இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தூக்க நேர்ச்சைக்காக குறைந்த அளவு தூக்கமே பதிவாகி இருந்தது. இந்த தூக்கம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. தூக்க நேர்ச்சை ஆனாது தூக்க தேரில் இரண்டு வில்கள் பொருத்தப்பட்டு அதில் 4 குழந்தைகளை தூக்ககாரர்கள் தூக்கி கோவிலை சுற்றி ஒரு முறை வலம் வர வைத்து நேர்ச்சை கடனை முடித்து வைக்கின்றனர். இந்த நிகழ்வை காண குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தூக்க தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: