நியூஸ்18 செய்தி எதிரொலியால் சென்னையில் கொத்தடிமைகளாக பணிசெய்தவர்களுக்கு மறுவாழ்வு!

மூன்று தலைமுறைகளாக பணிபுரிந்து வரும் அவர்களுக்கு முறையான ஊதியம், உணவு, மருத்துவம், இருப்பிடம் உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்துதரப்படாததால் கொத்தடிமைகள் போல் பணிபுரிந்து வந்தனர்.

Karthick S | news18
Updated: September 26, 2019, 10:25 PM IST
நியூஸ்18 செய்தி எதிரொலியால் சென்னையில் கொத்தடிமைகளாக பணிசெய்தவர்களுக்கு மறுவாழ்வு!
Karthick S | news18
Updated: September 26, 2019, 10:25 PM IST
நியூஸ்-18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக சென்னையில் மாட்டுப்பண்ணையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதற்காக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொழிலாளர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சென்னை ஓட்டேரியில் வசித்து வரும் மார்வாடி சமுகத்தினர் "தி மெட்ராஸ் பிஞ்சுராபோல்" என்ற பெயரில் மாட்டுப் பண்ணை நடத்தி வருகின்றனர். 1906-ம் ஆண்டு முதல் 12.5 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த பண்ணையில் மாடுகளைப் பராமரிப்பதற்காக சென்னை, திருவண்ணாமலை மட்டுமின்றி ஆந்திராவில் இருந்தும் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒரு ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மூன்று தலைமுறைகளாக பணிபுரிந்து வரும் அவர்களுக்கு முறையான ஊதியம், உணவு, மருத்துவம், இருப்பிடம் உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்துதரப்படாததால் கொத்தடிமைகள் போல் பணிபுரிந்து வந்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் செவிசாய்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.


இதனையறிந்த நமது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தியாளர் குழு, அந்த பண்ணைக்கு சென்று தொழிலாளர்கள் படும் அவலத்தை கள ஆய்வு செய்தது. மேலும், நமது தொலைக்காட்சியில் இரண்டு நாட்களாக பிரத்யேக செய்தி தொகுப்பாக ஒளிபரப்பப்பட்டது.

இதன்எதிரொலியாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பண்ணை தொழிலாளர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகள் தலைமையில் மாட்டுப் பண்ணையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் குடியிருப்பை சீரமைப்பது, ஊதிய உயர்வு, இ.எஸ்.ஐ, வருங்கால வைப்பு நிதி, ஓய்வுக்கு பின் முதிர்வுத் தொகை வழங்குதல், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் என 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பண்ணை உரிமையாளர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.மாட்டுப் பண்ணையில் தற்போது 64 பெண் பணியாளர்கள் மற்றும் 38 ஆண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெண்களுக்கு 7 ஆயிரத்து 350 ரூபாயும், ஆண்களுக்கு 9 ஆயிரத்து 190 ரூபாயும் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய ஒப்பந்தத்தின்படி சமவேலைக்கு சம ஊதியம் என 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதுவரை வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதிய உயர்வு 11 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்க பண்ணை நிர்வாகம் முன்வந்துள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான நிலுவை தொகையை செலுத்தவும், ஓய்வுபெற்ற 19 தொழிலாளர்களுக்கு முதிர்வு தொகை வழங்கவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக 3 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும்.

Also see:

First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...