’உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' - மாஜிஸ்திரேட்டை மிரட்டிய போலீஸ்

சாத்தான்குளம் இரட்டை மரண வழக்கில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை போலீஸ் ஒருவர் ஒருமையில் திட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
நீதித்துறை நடுவரை (மாஜிஸ்திரேட்) ஒருமையில் பேசிய சாத்தான்குளம் காவல் சரக உயர் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

சாத்தான்குளம் இரட்டை மரணம் குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை திங்கள்கிழமை நடந்து முடிந்த நிலையில், நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் புகார் வந்ததாகக் கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதித்ததுறை நடுவர் விசாரணை நடத்தியபோது கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் வீடியோ எடுத்ததாகவும், தேவையான ஆவணங்களை தராமல் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினர்.

மேலும், மகராஜன் என்ற காவலர் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தடித்த வார்த்தைகளில் நீதித்துறை நடுவரை திட்டியதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய உத்தரவிடுவதாகவும்  உடனடியாக மூவரையும் இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.



மேலும், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading