உலகத் தமிழர்களை இணைப்பதே ஆறாம் உறுதிமொழி - கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுதி மொழிகள் என்று கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

news18
Updated: April 15, 2019, 11:24 AM IST
உலகத் தமிழர்களை இணைப்பதே ஆறாம் உறுதிமொழி - கமல் ஹாசன்
கமல்ஹாசன்
news18
Updated: April 15, 2019, 11:24 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் உறுதிமொழி, உலகத் தமிழர்களை இணைப்போம். நம் உரிமைகளைக் காப்போம் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுதி மொழிகள் என்று கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் உறுதிமொழி. ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது. இரண்டவது, 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது. மூன்றாவதாக வறுமையை அகற்றுவோம் குடிசை, இல்லா தமிழகம் காண்போம்.

மேலும், நான்காவதாக விவசாயம் காப்போம். தமிழகத்தின் பொருளாதாரத்தை வளர்ப்போம். ஐந்தாவதாக ஆண் பெண் இருபாலருக்கும் , சமமான உரிமையும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று ஆறாவது உறுதி மொழியை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலகத் தமிழர்களை இணைப்போம். நம் உரிமைகளைக் காப்போம் என்று தெரிவித்திருந்தார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...