கொரோனா காரணமாக முன்பை போல பலரால் சட்டென்று ஹோட்டல்கள் அல்லது ரெஸ்டாரண்ட்களுக்கு சென்று சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டாலும், உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் கொரோனா நாட்டை விட்டு முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களை கூட டெல்டா வேரியன்ட் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாலும், மூன்றாம் அலையை நாடு எதிர்நோக்கி இருப்பதாலும் பொதுவெளிக்கு செல்லுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது.
இதனிடையே இந்த வார துவக்கத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவகங்கள் முழுமையாக திறக்கட்டுள்ளதால், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு உணவக உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் ஒரு விதியாக உணவக ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதிலும் 2-வது டோஸ் போட்டு கொண்டு 14 நாட்களை கடந்திருக்க வேண்டும் என்பதாகும். , இது அவசியமான ஒரு விதியாக கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க உண்மையிலேயே இந்த விதி உதவ முடியும். எனினும் எல்லா மாநிலங்களிலும் இது போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உணவகங்களுக்கு சென்று சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது நீங்கள் சாப்பிடும் அனுபவத்தை பாதுகாப்பானதாகவும், இனிமையானதாகவும் மாற்றி கொள்ள உங்களுக்கு தேவையான சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
* உணவகத்திற்கு சென்று சாப்பிட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் முதலில் நீங்கள் முழு டோஸ் தடுப்பூசியும் போட்டிருப்பது நல்லது. இரண்டாம் டோஸ் போடு கொண்ட உடனேயே நீங்கள் ரெஸ்டாரண்ட் செல்ல வேண்டாம் . குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பு கவசமாக இருப்பதால், கொரோனா வேரியன்ட்களிடமிருந்து பாதுகாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். உணவகங்களுக்கு போகும் போது மாஸ்க், சானிடைசர் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும். தவிர அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து கோவிட் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
* உணவருந்த செல்லும் உணவகம் திறந்தவெளி உணவகமாக இருப்பது போல பார்த்து கொள்ளுங்கள். ஒரு டேபிளுக்கும் அடுத்த டேபிளுக்கும் இடையே குறைந்தது 6 அடி இடைவெளியை பராமரிக்கும் உணவகங்களை தேர்வு செய்வது நல்லது. நீங்கள் இந்த விதிகளை பின்பற்றினாலும் காற்று மூலம் கொரோனா பரவலாம் என்பதை நினைவில் கொண்டு சாப்பிட துவங்கும் முன், சாப்பிட பின் மாஸ்க் அணிவதை மறக்காதீர்கள். உணவக ஊழியர்கள் மற்றும் அங்கிருக்கும் மக்களிடம் நெருங்கி செல்லாமல் சற்று விலகியே இருங்கள்.
Also Read : ஈஸ்வரன் நடிகை நிதி அகர்வால் போல் நீங்களும் அழகில் ஜொலிக்க வேண்டுமா..? அவரே சொல்லும் டிப்ஸ்
* உணவக வாயில்களில் வைக்கப்பட்டிருக்கும் சானிடைசர் பாட்டில்களை பலரும் தொட்டு பயன்படுத்துவதால் நோய் அபாயம் இருக்கிறது. எனவே நீங்கள் தனிப்பட்ட முறையில் கை சுகாதாரத்தை பராமரிக்க வீட்டிலிருந்து சானிடைசர் கொண்டு செல்லுங்கள். கொண்டு செல்ல மறந்து விட்டால் போதுமான பாதுகாப்பை பயன்படுத்தி அங்கிருக்கும் சானிடைசர் பாட்டில்களை பயன்படுத்துங்கள்.
* அங்கிருக்கும் கழிவறையை பயன்படுத்தும் போது, டாய்லெட் சீட் சானிடைசர் பயன்படுத்துங்கள். மீண்டும் நீங்கள் உங்கள் டேபிளுக்கு திரும்பும் போது கைகளை சானிடைசர் கொண்டு ஒருமுறை சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் உணவக கழிவறைகளை பயன்படுத்தும் போது சுத்தமற்ற கதவு அல்லது தாழ்ப்பாளை நீங்கள் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
* இந்த பெருந்தொற்று காலத்தில் ஆரோக்கியம் விலைமதிப்பற்ற பொருளாக இருப்பதால், நல்ல தரமான உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவகத்தைத் தேர்வு செய்யவும். உணவக வெயிட்டர்கள் மாஸ்க் அணிந்து, கோவிட் நெறிமுறைகளை முறையாக பின்பற்றும் உணவகத்திற்கு செல்வதே பாதுகாப்பானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.