சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Web Desk | news18
Updated: September 13, 2019, 12:33 PM IST

சென்னையில் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் பிடிபட்டனர்.

சென்னை வேப்பேரி காவல் நிலையத்துக்கு நேற்று மாலை செல்போனில் பேசிய ஒருவர், சூளையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாகவும், சூதாட்டத்தில் தன்னுடைய உறவினர் 30 லட்சத்தை இழந்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Also read... பிக்பாஸில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் பளார் என அறைவாங்கிய கவின்! அடித்தது யார் தெரியுமா?

இதையடுத்து வேப்பேரி உதவி ஆணையர் மகேஷ்வரி தலைமையிலான போலீசார், சூளை பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 6 பேரையும் வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான தகவல் அறிந்து காவல்நிலையத்திற்கு வந்த 6 பேரின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Also see...

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...