திருவள்ளூரில் 3 மாத பெண் குழந்தையை 7,000 ரூபாய்க்கு விற்க முயற்சி...!

திருவள்ளூரில் 3 மாத பெண் குழந்தையை 7,000 ரூபாய்க்கு விற்க முயற்சி...!
குழந்தையை விற்பனை செய்ய முயன்றவர்கள்
  • News18
  • Last Updated: December 9, 2019, 12:47 PM IST
  • Share this:
திருவள்ளூரில் 3 மாத பெண் குழந்தையை விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்த போது கஞ்சா போதையில் 4 இளைஞர்கள் மற்றும் மூன்று பெண்கள் 3 மாத பெண் குழந்தையுடன் சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.


குழந்தையின் தாய் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவரை சென்னையிலுள்ள காப்பகத்தில் சேர்த்த போலீசார், மற்ற ஆறு பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் குழந்தையை கடத்தி வந்தார்களா என்பது குறித்தும் எதற்காக 7,000 ரூபாய்க்கு விற்க முயன்றனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see...
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading