திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து... குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

விபத்து நடந்த பகுதி

 • Share this:
  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

  திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் டாடா சுமோ காரில் சென்னை, ஆவடி பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.

  கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூச்சி கொளத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண் குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  இரு பெண் குழந்தைகள் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  Also read... பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஜிம்னாஸ்டிக் ஆசிரியர் கைது

  காவல்துறையின் முதற்கட்ட விசாரனையில் அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காலம் என தெரிவித்தனர்.

  முருகேசன்(40), முருகன்(35), முருகராஜ்(38), மலர்(35), மத்துமனிஷா(9) ஓட்டுனர் உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளர். மேலும் மாயா(7), அரிஷா(6) ஆகிய இரு பெண் குழந்தைகள் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  விபத்து நடந்த இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: