• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்புவனத்தில் மாவட்ட ஆட்சியர் ஏற்பாட்டால் புதிய இடத்துக்கு மாற்றப்பட்ட வாரச்சந்தை

திருப்புவனத்தில் மாவட்ட ஆட்சியர் ஏற்பாட்டால் புதிய இடத்துக்கு மாற்றப்பட்ட வாரச்சந்தை

நீதிமன்றம் வரை இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. கடைசியாக சேதுபதி நகர் எதிரே வாரச்சந்தை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடும் நெருக்கடியில் இருந்து வந்த சந்தை, மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் எடுத்த முயற்சியால் குளுகுளு மரங்களால் சூழப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

திருப்புவனம் சிவகங்கை ரோட்டில் கடும் நெருக்கடி இடத்தில் இயங்கி வந்த சந்தையால் தினந்தோறும் வாகன நெருக்கடி போன்ற பல பிரச்னைகள் இருந்து வந்தன. இதனால் பொது மக்கள் அவதியுற்றனர். இந்நிலையில், சந்தையை ஒரு தரப்பு இடமாற்றம் செய்யக் கூடாது என்றும் மற்றொரு தரப்பு இடமாற்றம் வேண்டும் என்றும் கோரி வந்தது.

நீதிமன்றம் வரை இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. பொது மக்கள் தங்கு தடையின்றி, போக்குவரத்து இடையூறு இல்லாமல் சேதுபதி நகர் எதிரே உள்ள இடத்தில் நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறினர். பல கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்ற சூழலில், கடைசியாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் சமூக ஆர்வலர் அயோத்தி ஆகியோர் எடுத்த முயற்சியால் சேதுபதி நகர் எதிரே வாரச்சந்தை கொண்டு செல்லப்பட்டது.

இதன் தொடக்க விழாவில் அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை  எம்.எல்.ஏ நாகராஜன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய சந்தைக்கான இடத்தைத் திறந்து வைத்தனர். அதற்கான பூஜைக்குப் பிறகு வாரச் சந்தை இயங்குவதற்குத் தயாராகியுள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: