செல்பி எடுக்க முயன்றவரின் செல்ஃபோனை மீண்டும் தட்டிவிட்ட சிவகுமார்! வைரலாகும் வீடியோ

அந்தச் சமயத்தில் ரசிகர் ஒருவர் அவருடன் நின்று செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். கோபமடைந்த சிவகுமார் போட்டா எடுப்பதற்கு முன்பே அவரின் செல்போனைத் தட்டிவிட்டார்.

news18
Updated: February 7, 2019, 6:23 PM IST
செல்பி எடுக்க முயன்றவரின் செல்ஃபோனை மீண்டும் தட்டிவிட்ட சிவகுமார்! வைரலாகும் வீடியோ
சிவகுமார்
news18
Updated: February 7, 2019, 6:23 PM IST
இயக்குநர் ராம்தாஸ் இல்லத் திருமணத்துக்குச் சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுக்க முயற்சி செய்த ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்டுள்ளார். அவர், செல்போனைத் தட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கடந்த ஆண்டு, மதுரையில் நடந்த தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டார். அந்தச் சமயத்தில் ரசிகர் ஒருவர் அவருடன் நின்று செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். கோபமடைந்த சிவகுமார் போட்டா எடுப்பதற்கு முன்பே அவரின் செல்போனைத் தட்டிவிட்டார்.
2018 வைரல் வீடியோக்கள் லிஸ்டில் இதுதான் டாப் இடத்தைப் பிடித்திருந்தது. பின்னர், பலரும் சமூக வலைதளங்களில் சிவகுமாருக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து, அந்த இளைஞருக்கு புதிய செல்போன் ஒன்றை சிவகுமார் வாங்கிக் கொடுத்து, தன்னுடைய செயலுக்கு வருத்தமும் தெரிவித்தார். இந்தநிலையில், நடிகரும் இயக்குநருமான இ.ராம்தாஸ் வீட்டின் இல்லத் திருமண விழாவில் ஏராளமான திரைப் பிரபலங்களுடன் நடிகர் சிவகுமாரும் கலந்துகொண்டார்.

அப்போது வாசலுக்கு அருகே நடந்து வந்துகொண்டிருந்த சிவகுமாரின் அருகே நின்று ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். கடும் கோபத்தோடு செல்போனைத் தட்டிவிட்டுச் சென்றார் சிவகுமார். ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் இந்த வீடியோதான் டிரெண்டிங்கில் இருக்கிறது. சிவகுமாரைக் கேலி செய்யும்விதமாக, இணையத்தில் ஏராளமான மீம்ஸ்கள் வந்துள்ளன.Loading...

First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...