Home /News /tamil-nadu /

திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன நிலையில் விசிக நிர்வாகியின் மனைவி படுகொலை

திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன நிலையில் விசிக நிர்வாகியின் மனைவி படுகொலை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிவகாசி அருகே திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன நிலையில், விசிக நிர்வாகியின் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியில் உள்ள பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வ மணிகண்டன். இவர் திருத்தங்கல் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். திருத்தங்கலில் உள்ள ஒரு பட்டாசு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த ஜூன் 24ஆம் தேதி ஆலமரத்துபட்டியைச் சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான 24 வயதான பிரகதி மோனிகா என்பவருடன் செல்வ மணிகண்டனுக்கு திருமணம் நடைபெற்றது. ஊரடங்கால் உறவினர்கள் பெரிய அளவில் கலந்து கொள்ள முடியாத நிலையில், திருமணத்தை சமூக வலைதளங்கள் மூலமாக நேரலையில் பகிர்ந்து மணமக்கள் வாழ்த்து பெற்றனர்.

    திருமண வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல் செல்வ மணிகண்டன் வேலைக்குச் சென்றார். பிற்பகல் 1.30 மணியளவில் மனைவியிடம் போனில் பேசியுள்ளார். அதன் பிறகு பிரகதியை போனில் தொடர்பு கொண்டபோது எடுக்காததால் அருகில் உள்ள உறவினரை சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.

    அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிரகதி பிணமாக கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர் செல்வ மணிகண்டனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு வீட்டுக்கு விரைந்துள்ளார். அங்கு மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை செய்யப்பட்ட பிரகதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து புதுமணப்பெண் கொலைக்கான காரணம் என்ன என விசாரித்து வருகின்றனர்.

    பிரகதி கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க நகை காணமல் போனதாக முதலில் கூறப்பட்டது. அதனால் நகைக்காக கொலை நடந்திருக்குமா என்ற போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஆனால் அந்த நகை வீட்டிற்குள்ளேயே கிடந்ததால் நகைக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    Also read... கரூர் அருகே பயங்கரம் - செல்போன் வெடித்ததால் தீ விபத்து... தாய், 2 மகன்கள் உடல் கருகி உயிரிழப்பு

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக உள்ள செல்வ மணிகண்டனுக்கு அரசியல் ரீதியாக ஏதேனும் எதிரிகள் உள்ளனரா? அவர்களால் பிரகதி பழிதீர்க்கப்பட்டாரா என போலீசார் விசாரித்தனர். குறிப்பிட்டு சொல்லும்படி செல்வ மணிகண்டனுக்கும் எதிரிகள் இல்லை என தெரிய வந்தது.

    இதனால் பிரகதி கொலைக்கு என்ன காரணம் என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிரகதியின் உறவினர்கள், கல்லூரி தோழிகள் உள்ளிட்டவர்களிடம் பிரகதிக்கு யாரும் எதிரிகள் உள்ளனரா? கல்லூரி காலத்தில் பிரகதியை யாரும் தொந்தரவு செய்து வந்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.



    பிரகதி கொலை குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Sivakasi

    அடுத்த செய்தி