பட்டாசு தொழிலுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு தயாரிப்புக்கான மூலப் பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், நவம்பர் 12 - ம் தேதி முதல் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் காலவரம்பின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் தொழிலாளர்கள், பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருத்தங்கலில் உள்ள சோனி மைதானத்தில், இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நடக்கிறது.
இதில் அடுத்த நாளைய போராட்டம் குறித்து இன்றைய போராட்டத்தின் முடிவில் முடிவு செய்யப்படும். மேலும் தொடர்ந்து 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட பட்டாசு தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பட்டாசுக்கு விதித்த கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... முதல்வரின் ₹2000 சிறப்பு நிதிதிட்டத்திற்கு பாமக வரவேற்பு
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.