• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைகிறேன் - சிவாஜியின் மகன் ராம்குமார்

மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைகிறேன் - சிவாஜியின் மகன் ராம்குமார்

சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்

சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்

தமிழக பாஜக தலைவர் முருகனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய ராம்குமார் நாளை பாஜகவில் இணைய இருப்பதாக தெரிவித்தார்

  • Share this:
    தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பாஜக. எனவே மக்கள் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் கட்சியின் பக்கம் இழுக்கும் வேலைகளில் கடந்த சில் ஆண்டுகளாகவே தீவிரம் காட்டி வருகிறது.

    திரைத்துறை பிரபலங்களான நடிகர் விஜயகுமார், நமீதா, கஸ்தூரிராஜா, பொன்னம்பலம், ராதாரவி உள்ளிட்டோர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.

    இன்று சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த ராம்குமார் கட்சியின் தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியை தழுவி இருந்தாலும் தற்போது நான் தற்போது மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைக்கிறேன். நான் பாஜகவில் இணைய போகிறேன் என்று கட்சித் தலைவரிடம் தெரிவித்து விட்டு வந்தேன் எனக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்” என்றார்.

    பாஜகவில் நடிகர் பிரபு இணையும் திட்டம் ஏதும் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ராம்குமார், அவர் நடிகராக தனது பணியில் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார் எனக் கூறினார்.

    சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பாஜகவில் இணைவது குறித்து சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரும், காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவருமான சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சித் தலைவராக, காமராஜரின் சீடராக, பக்தராகக் கடைசிவரை வாழ்ந்து மறைந்த சிவாஜியின் புதல்வர், பெருந்தலைவரைக் கொல்ல முயன்ற கூட்டத்தின் பின்னணியில் செயல்படும் கட்சியில் இணைவது எந்த வகையிலும் சிவாஜியின் புகழுக்குப் பெருமை சேர்க்காது” என்று கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: