• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மானாமதுரை அருகே மடையை சீரமைக்காமல் ₹ 2 கோடிக்கு சாலைப் பணி - கிராம மக்கள்  போராட்டம்

மானாமதுரை அருகே மடையை சீரமைக்காமல் ₹ 2 கோடிக்கு சாலைப் பணி - கிராம மக்கள்  போராட்டம்

போராடிய மக்கள்

போராடிய மக்கள்

மானாமதுரை அருகே தண்ணீர் வரும் மடையை சீரமைக்காமல் சாலை அமைக்கும் பணியைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறுகுடி ஊராட்சிக்கு  உட்பட பகுதியான பாப்பாகுளம் கிராமத்தில் இருத்து இணைப்பு சாலையாக புதுகுளம் கிராமத்திற்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு  2 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

பாப்பாகுளம் கிராமத்திற்கு சொந்தமான இரண்டு மடைகள் சீரமைக்கமால் ரோடு, பணி செய்தால் மடைக்கு தண்ணீர் வருவதில் பிரச்சனை ஏற்படும். அதனால் அந்த இரு மடைகளை சீரமைத்து பிறகு சாலைப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி இயந்திரம் மற்றும் லாரிகளை சிறை பிடித்து மானாமதுரை யூனியன் துணை தலைவர் முத்துச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், துணை தலைவர் நல்லுசாமி ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

சாலைப்பணிக்கு வந்தவர்களை யாரும் வேலை பார்க்க கூடாது. மடையை சீரமைப்பு செய்த பிறகு சாலை போட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று லாரிகள் திரும்பி சென்றன.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: