• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவகங்கையில் சரக்கு கிடைத்த மகிழ்ச்சியில் செல்பி எடுத்து மகிழ்ந்த குடிமகன்கள்...!

சிவகங்கையில் சரக்கு கிடைத்த மகிழ்ச்சியில் செல்பி எடுத்து மகிழ்ந்த குடிமகன்கள்...!

செல்பி எடுத்த குடிமகன்

செல்பி எடுத்த குடிமகன்

மதுபானங்களை வாங்க மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காலை 9 மணி முதல் காத்திருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 130 கடைகள் காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டது மதுபானங்களை வாங்க மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காலை 9 மணி முதல் காத்திருந்தனர்.

சமூக இடைவெளிக்காக போடப்பட்டிருந்த கட்டங்களில் வரிசையாக சென்றவர்களுக்கு ஆதார் இல்லாமலேயே அளவின்றி  மதுபாட்டில்கள் வழங்கியதால், மகிழ்ச்சி அடைந்து வாங்கினர். வாங்கிய சரக்குகளை பலர் ஆடைகளுக்குள் ஒளித்து மறைத்து எடுத்துச் சென்றனர்.

சிலர் மதுக்கடை முன்பு காத்திருக்கும் போதும் மதுவை வாங்கிய பின்பும் செல்பி எடுத்து சக நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ச்சி அடைந்தனர் மதுபானம் கிடைத்த மகிழ்ச்சியில் பாட்டிலோடு பலர் வலம் வந்தனர்.

முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், டோக்கன் முறை பலத்த போலீஸ் பாதுகாப்பு என கடந்த வாரத்தை விட தற்பொழுது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: