மணல் கொள்ளையைத் தடுக்கும் அதிகாரிகளை வேவு பார்க்கும் மணல் மாஃபியாக்கள்

தொடர்ந்து கொள்ளை போகும் மணலால் வைகை ஆறே இல்லாமல் போகுமோ எனும் அச்சம் நிலவுகிறது.

மணல் கொள்ளையைத் தடுக்கும் அதிகாரிகளை வேவு பார்க்கும் மணல் மாஃபியாக்கள்
தொடர்ந்து கொள்ளை போகும் மணலால் வைகை ஆறே இல்லாமல் போகுமோ எனும் அச்சம் நிலவுகிறது.
  • Share this:
மணல் கொள்ளையில் ஈடுபடும்போது அதைத் தடுக்கும் பணியில் உள்ள அதிகாரிகளை மணல் மாஃபியாக்கள் வேவு பார்த்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முழுவதும் வைகை ஆற்றுப் பகுதிகளில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வைகை ஆறு இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மானாமதுரையில் கொள்ளையடிக்கும் மணலானது, 6 யூனிட் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. கால்பிரிவு, பூக்குளம், கீழப்பசளை, கள்ளர் வலசை, வேதியரேந்தால், கல்குறிச்சி போன்ற இடங்களில் பகல்-இரவு நேரங்களில்  லாரிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் சோதனைக்கு கிளம்புகின்ற இடத்தில் ஆட்களை வேவு பார்ப்பதற்கு வைத்து விட்டு, எங்கெல்லாம்  வண்டி போகின்றவோ அங்கெல்லாம் கண்காணிக்க ஆட்களைப் போட்டு மாஃபியாக்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.


கடந்த சில நாட்களாக பூக்குளம், கல்குறிச்சி மற்றும் கால்பிரிவு பகுதி ஆற்று ஓரங்களில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மணலைக் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்குச் சென்று மணல் அள்ளும் இடத்தைப் பார்த்து விட்டு திரும்பிவிட்டனர், நடவடிக்கைகள் எடுக்கவில்லை. யார் என்று கூட விசாரணை செய்யவில்லை என்று அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது.

லாரிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை விட்டுவிட்டு தலைச்சுமை மணல் கொண்டு போவோரைப் பிடித்து போலீசார் வழக்குப் பதிவிடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. கள்ளர் வலசை, ராஜகம்பீரம், கல்குறிச்சி, கால்பிரவு, பனிக்கனேந்தல், பூக்குளம், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை போகும் மணலால் வைகை ஆறே இல்லாமல் போகுமோ எனும் அச்சம் நிலவுகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see:
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading